ஒரு நாள் டெலிவரி ஏஜன்டாக மாறிய சொமேட்டோ நிறுவன சி.இ.ஓ!
புத்தாண்டு தினத்தன்று உணவு ஒர்டர்கள் அதிகரித்ததால், டெலிவரி போயாகா சொமேட்டொ நிறுவனர் தீபிந்தர் கோயல் மாறியிருக்கும் தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தீபிந்தர் கோயல்
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் சிஇஓவாக இருப்பவர் தீபேந்திர கோயல்.
சொமேட்டோ நிறுவனத்தில் இந்த நிறுவனத்தில் சுமார் 4,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆயிரக்கணக்காணோர் டெலிவரி போய்களாக வேலை செய்கின்றனர்.
இவர் டெலிவரி போயாக வேலை செய்வது இது முதன் முறை அல்ல. சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிகோயலும் மற்ற சீனியர் மேனேஜர்களும் வருடத்தில் குறைந்தப்பட்சம் நான்கு முறையாவது டெலிவரி பாயாக வேலை செய்கிறார்கள்.
டெலிவரி போயாக அவதாரம்
புத்தாண்டு தினத்தில் மக்கள் கொண்டாட்டத்தில் இருப்பதால் சொமேட்டோ நிறுவனத்திற்கு உணவு ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், தன் நிறுவன ஊழியர்களுக்கு பக்கபலமாக டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் களமிறங்கியிருக்கிறார்.
சோமோட்டோ நிறுவனத்தின் சீருடையை அணிந்து கொண்டு கையில் உணவுப் பொருள்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தீபேந்தர் சில ஆர்டர்களை நானே டெலிவரி செய்யப் போகிறேன்.
My first delivery brought me back to the zomato office. Lolwut! https://t.co/zdt32ozWqJ pic.twitter.com/g5Dr8SzVJP
— Deepinder Goyal (@deepigoyal) December 31, 2022
சீக்கிரம் வேலையை முடித்து ஒரு மணிநேரத்தில் திரும்பிவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும் சொமேட்டொ நிறுவனர் தீபிந்தர் கோயலை பாராட்டி வருகின்றனர்.