மீண்டும் பிரியாணிக்கே முதலிடம்!
2022 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் பல்வேறு ப்ராண்டுகள் தங்களின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் சொமேட்டோ செயலி மூலம் இந்தியாவில் அதிகம் ஒர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் மீண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
பிரியாணி
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வகையான உணவுகள், பாரம்பரிய உணவுகள் என பலவாறு உள்ளன. ஆனால் பிரியாணி என்றால் பலருக்கு வாயில் எச்சில் ஊறும்.
பிரியாணியில் ஐதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி மற்றும் கொல்கத்தா பிரியாணி என பலவகைகளில் உள்ளது.
சொமோட்டா நிறுவனம்
அதிக ஒர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் தொடர்பாக ஜொமேட்டோ நிறுவனம் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில், இந்தியர்களால் அதிகம் ஒர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் மீண்டும் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்தியாவில் 186 பிரியாணி ஒர்டர்கள் டெலிவெரி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் இரண்டு முக்கிய உணவு டெலிவெரி செயலி நிறுவன அறிக்கையின் படி, இந்தியர்கள் அதிகம் உண்ணும் உணவு வகையில் இந்தாண்டும் பிரியாணி தான் முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் பீட்சா இடம் பிடித்துள்ளது. மேலும், தந்தூரி சிக்கன், பட்டர் நான், வெஜ் ப்ரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ப்ரைடு ரைஸ் மற்றும் வெஜ் பிரியாணி போன்றவையும் அதிகம் ஒர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன.