ஒரு கப் டீ-க்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்... அலைமோதிய கூட்டத்தால் கடைக்காரர் வைத்த டுவிஸ்ட்
இந்திய மாநிலம் தமிழகத்தில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று டீக்கடைக்காரர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உயரும் தக்காளியின் விலை
நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. தக்காளியினால் சிலர் ஒரு சில வாரத்தில் லட்சாதிபதியாகவும், கோடீஸ்வரர் ஆகவும் ஆகிவருகின்றனர்.
அந்த அளவிற்கு தக்காளியின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. தக்காளியா? தங்கமா? என்று ஆன்லைனில் மீம் வேறு அனல் பறந்து வருகின்றது. ரூபாய் 200, 180,, 160 என நாளுக்கு நாள் அதிகரிக்கவும், குறையவும் செய்து வருகின்றது.
சில திருமணங்களில் பரிசாக தக்காளியை கொடுக்கும் பழக்கமும் வந்துள்ளது. ஆனால் உத்திர பிரதேசத்தில் காய்கறிகடை வியாபாரி ஒருவர் தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.
ஒரு கப் டீக்கு ஒரு கிலோ தக்காளி
இந்நிலையில், சென்னை கொளத்தூர் கண்பதி ராவ் நகரில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, மக்கள் கூட்டம் டீக்கடையில் அலைமோதியது.
ஆனால், மக்கள் கூட்டத்திற்கு அந்த கடைக்காரர் போலிஸ் பாதுகாப்பு முன்பே போட்டிருந்தார். ஒரு டீ 12 ரூபாய்க்கு வாங்கி 180 ரூபாய் விற்கும் தக்காளியை கொடுத்தால் கூட்டம் அலைமோத தானே செய்யும்.
அதை சுதாரித்த கடைக்காரர், முதலில் வரும் 100 டோக்கனுக்கு மட்டும் தான் தக்காளி இலவசம் என்று கூறி அவர்களுக்கு மட்டும் தக்காளி வழங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |