ஒரே ஒரு கப் டீ உடல் எடையை அதிகரிக்குமா? நிபுணர்களின் அதிர்ச்சி தகவல்
ஒரு கப் டீ உடல் எடை அதிகரிக்குமா என்பதை ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் விளக்கியுள்ள பதிவை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் தூக்கத்தில் இருந்து எழும்பியதும் முதல் தெரிவாக டீ அல்லது காபியைத் தான் விரும்புகின்றனர்.
ஆனால் இவை ஆரோக்கியமானது தானா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை அதிகரிக்கும் ஒரு கப் டீ
ஒரு கப் தேநீரில் 33-66 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த கலோரிகள் பாலின் உள்ளடக்கத்தைப் பொறுத்து மாறுபடும்.
அதே சமயம் டீயுடன், சர்க்கரை சேர்த்து பருகும் போது இன்னும் கலோரிகள் அதிகமாகுமாம். 1 டீஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொண்டால் 48 கலோரிகள் காணப்படுமாம்.
இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 10 கிராம் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
டீ மட்டுமின்றி இதனுடன் பிஸ்கட், ரஸ்க் இவறறினை சேர்த்து சாப்பிட்டால் இன்னும் கலோரிகள் அதிகமாகி உடல் எடையை நிச்சயமாக அதிகரிக்கும்.
டீ குடிக்கும் போது இதை கவனிங்க
நாள் ஒன்றிற்கு இரண்டு கப் அளவு டீ குடிக்கலாம். ஆனாலும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
உணவுடன் டீ குடிப்பதை தவிர்க்கவும், அதிலும் நட்ஸ் சாப்பிட்டால் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் இடைவெளிவிட்டே டீயை பருகவும்.
பதட்டம், தூக்கக் கோளாறுகள், செரிமான பிரச்சினை இருப்பவர்கள் தூங்க செல்லும் முன்பு தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இதே போன்று அமிலத்தன்மையை தடுக்கவும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்கவும்.
டீ அல்லது காபிக்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகினால் செரிமான கவலைகள் இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |