ஸ்பெஷல் ரவா அப்பம்... சுலபமாக செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பு உண்ணும் இனிப்பு வகைகளில் ஒன்றான ரவா அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
ரவை- ஒருகப்
சர்க்க்ரை- 2 கப்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை நெய்
செய்முறை:
வாணலி ஒன்றில் சிறிது நெய்விட்டு அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக்கொண்ட பின்பு, சிறிது எண்ணெய் விட்டு அதில் ரவையையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவு ஊற்றி கொதி வந்ததும், ரவையை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.
வெறும் 5 நிமிடம் ரவையை வேகவிட்ட பின்பு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும். தொடர்ந்து சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து ஒன்றாக கலந்து கிளறவும்.
குறித்த கலவை ஒரு தட்டில் கொட்டி சிறு உருண்டையாக உருட்டி அதிரசம் வடிவில் தட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அப்பத்துண்டுகளை போட்டு பொறித்து எடுக்கவும். தற்போது சுவையான ரவா அப்பம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |