ஒரே நேர் கோட்டில் ஆறு கிரகங்கள்: ஜூன் 3ம் தேதி நிகழும் அதிசயம்
ஜுன் 3ம் தேதி ஒரே கோட்டில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கிரகங்கள் காணப்பட இருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிந்துள்ளனர்.
ஜுன் 3ல் நிகழும் அதிசயம்
புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களின் சீரமைப்பு காரணமாக வானத்தில் ஒரே நேரத்தில் பார்க்க இது சிறந்த வாய்ப்பாகும்.
ஜூன் 3, 2024 திங்கட்கிழமை அதிகாலை வானத்தில் கோள்கள் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் இயற்பியல் மற்றும் வானியல் துறையின் விரிவுரையாளர் கேட் பாட்ல் தெரிவித்துள்ளதாவது, “ஒரு கிரக சீரமைப்பு என்பது ஒரு வானியல் நிகழ்வாகும்.
சூரிய குடும்பத்தின் பல கிரகங்களின் சுற்றுப்பாதைகள் அவற்றைக் கொண்டு வரும் போது, தோராயமாக அதே நேரத்தில் சூரியனும் இருக்கும். இவற்றினை பூமியிலிருந்து பார்க்கும் போது வானத்தில் ஒரு கோட்டில் தோன்றும் என்று பொருளாகும்.
இதில் வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் வானத்தின் குறுக்கே ஒரு கோட்டை உருவாக்கும்.
ஜூன் 3 ஆம் தேதி சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரவிருக்கும் கிரக சீரமைப்பைக் கண்டறியலாம். இவற்றினை பார்ப்பதற்கு தொலைநோக்கிகள் அவசியம் ஆகும்.
இதில் வியாழன் கிரகம் பிரகாசமாக இருப்பதால் எளிதில் கண்டறியலாம். ஆனால் கிரகங்கள் நட்சத்திரங்களைப் போன்று மின்னுவதில்லை என்பதை தெரிந்து கொள்ளவும்.
ஸ்கை மேப், ஸ்டார் சார்ட் அல்லது ஸ்கை டுநைட் போன்ற நைட் ஸ்கை பயன்பாட்டைப் பயன்படுத்துவது அவற்றைத் துல்லியமாகக் கண்டறிய உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |