ஓமிக்ரோன் வைரஸ் உடலின் எந்தெந்த பாகங்களை பாதிக்கும்? எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கடந்த நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. கொரோனா ஒரு பக்கம் பரவி வந்தாலும், ஓமிக்ரோன் வைரஸும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், இந்த மாறுபாட்டால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை குறைவு தான். ஓமிக்ரோன் வைரஸ் சாதரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர். இவை உயிரிழப்பை அதிகப்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.
மேலும், ஒருமுறை தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டால், சிலருக்கு அது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. ஓமிக்ரோன் ஆனது நுரையீரலை பாதிக்காது என்பது ஒரு நல்ல விஷயமாகும்.
இது மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ஆக்சிஜன் தேவைப்படுவது, ஐசியூ-வில் அனுமதி போன்ற போன்ற பிரச்னைகள் வெகு சிலருக்கே ஏற்படுகின்றன.
ஓமிக்ரோன் பாதிப்பானது தோள்பட்டை வலி, முழங்கால்கள், தொண்டை வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி உடலின் பல பாகங்களை பாதிக்கிறது.