Omicron தொற்று ஏற்பட்டால் முதல் அறிகுறி என்னென்ன? நிபுணர்களின் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவில் கடும் வேகமாக பரவி வருகின்றது.
இந்த ஒமிக்ரான் தொற்று டெல்டாவைப் போன்று பயங்கரமான விளைவினை ஏற்படுத்தாமல் குறைவாகவே பாதிப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
முதல் அறிகுறி
ஒமிக்ரானின் முதல் அறிகுளி என்னவெனில் தொண்டை புண் என்றே கூறப்படுகின்றது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் ஒமிக்ரானின் முக்கிய மற்றும் முதல் அறிகுறி தொண்டை புண், தொண்டை கரகரப்ப, மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல்வலி போன்றவற்றைக் கூறியுள்ளனர்.
ஆய்வுகள் கூறுவது என்ன?
Zoe Covid Symptom ஆய்வின்படி, ஓமிக்ரான் நோயாளிகளில் தொண்டைப் புண்தான் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியாக உள்ளது.
நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிறிஸ்துமஸ் விருந்திற்குப் பிறகு கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேருக்கு தொண்டை வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் மூன்று நாட்களுக்கு தொண்டை வலி நோயாளிகளை பாடாய் படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு mRNA டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள்.
பேராசிரியர் ஜோர்ஜ் மோரேனோ, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த அனைத்து தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகளிலும், ஓமிக்ரானின் அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருந்ததாகவும் சில நாட்களுக்கு நீடித்ததாகவும் கூறினார்.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், சளி மற்றும் குளிர் போன்ற அறிகுறிகள் இருந்தன. அவர்கள் இரண்டே நாட்களில் முழுமையாக குணமடைந்தனர்.
டெல்டாவைப் போலன்றி, ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நறுமணம் மற்றும் சுவை இழப்பு இருக்காது. ஓமிக்ரான் தொண்டைக்கு முன் மூக்கை முதலில் பாதிக்கிறது.