கண்களில் இந்த அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்: ஒமிக்கிரானின் முக்கிய அறிகுறியாம்
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில், கோவிட்-19 இன் மூன்று முக்கிய அறிகுறிகள் மட்டுமே இருந்தன.
அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் வாசனை அல்லது சுவை இழப்பு ஆகியவை கொரோனாவின் அந்த மூன்று அறிகுறிகள் ஆகும். எனினும், தற்போது கொரோனாவின் வடிவம் மாறி வரும் நிலையில், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன.
டெல்டா மற்றும் ஓமிக்ரான் (Omicron Variant) போன்ற வகைகளுக்குப் பிறகு, கொரோனாவின் அறிகுறிகள் வேகமாக மாறிவிட்டன. கொரோனாவின் அறிகுறிகள் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
ZOE கோவிட் ஆய்வு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), ஓமிக்ரானின் அறிகுறிகள் முதல் மாறுபாட்டைக் காட்டிலும் வேறுபட்டு இல்லை என்று நம்புகின்றன.
அதாவது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை யாராவது உணர்ந்தால், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளில் மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், சோர்வு, தலைவலி, தொடர் இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், தசை அல்லது உடல் வலி, சுவை அல்லது வாசனையின் இழப்பு, தொண்டை புண், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை அடங்கும்.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள், பொதுவான குளிர் காய்ச்சல் (Fever) போன்ற அறிகுறிகளுடன் ஏதேனும் விசித்திரமான அறிகுறிகளும் இருந்தால், அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
ஓமிக்ரான் மாறுபாட்டில் மிகவும் தீவிரமான விஷயம் என்னவென்றால், அது வேகமாக பரவி வருகிறது. மேலும் அதன் அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை பாதித்து வருவதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒமிக்ரான் கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis) போன்ற ஒரு நிலையையும் ஏற்படுத்தும் என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கான்ஜுன்க்டிவிடிஸ், அதாவது கண்கள் சிவந்து போகும் பிரச்சனை, உங்கள் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் கான்ஜுன்டிவா எனப்படும் மெல்லிய சவ்வில் ஏற்படும் வீக்கம் ஆகும். CDC மற்றும் WHO இதை ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறியாக (Omicron Symptom) இன்னும் கருதவில்லை.
ஆனால் இந்த அறிகுறி பல நோயாளிகளில் காணப்படுகிறது. பீட்டா மற்றும் டெல்டா வகைகளை விட ஓமிக்ரான் மாறுபாடு ACE-2 ஏற்பிகளுடன் பிணைக்கும் அதிகத் திறனைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே கான்ஜுன்க்டிவிடிஸ் ஓமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.