Omicron வைரஸ் அச்சுறுத்தல்! இந்த நாட்டுக்கு பயணத்தடையைப் விதித்தது இலங்கை
கொரோனா வைரஸ் பல வகைகளில் பரவி வரும் வேலையில், தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை வைரஸான ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் பரவி விட்டது.
இதுவரை பரவி வைரஸ்களை விட இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு ஆனது இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடையை அறிவித்துள்ளது.
இந்த தடை இன்று 28 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 5 லட்சத்து 61 ஆயிரத்து 59 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், 14,258 பேர் அந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர்.