ஓமிக்ரோன் வைரஸ் இத்தனை நாளில் குணமாகும்! ஆனால்.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை;
கொரோனா வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேலையில், மறுபக்கம் ஓமிக்ரோன் வைரஸ் அதிகரித்து வருகிறது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக கடுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் 3-வது அலை கொரோனா தொடங்கியுள்ளது,. அதேநேரத்தில், இதுவரை ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிடுவதாகவும், இருந்தாலும் அவர்கள் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டு மறு டெஸ்டில் நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டிற்கு
அனுப்பப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இதுவரை கிடைத்த முடிவுகளில் ஒமிக்ரானால் பெரும்பாலானோர் 5 நாட்களில் குணமடைந்துவிடுவதாக தெரிவித்தார்.