ஓமிக்ரோன் கொரோனாவை விரட்ட என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?
கொரோனா மற்றும் ஓமிக்ரோன் வைரஸ் இந்தியாவையும் ஆட்டிப்படைத்துகொண்டிருக்கும் வேலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதும் கட்டாயமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும், உணவுப்பொருட்கள் ஆன, வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல தரமான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.
ஒமிக்ரோனின் அறிகுறிகளை சுலபமாக போக்க உதவும் சில உணவுகள் உள்ளன. சூப்கள், மசாலா கலவைகள் கொண்ட சூடான பானங்கள் தொண்டை புண்ணை அதிகரித்துவிடும்.
அடுத்து, உணவை விழுங்குவது கடினமாக இருக்கும்போது கிச்சடி அல்லது கஞ்சி போன்ற மென்மையான அல்லது உணவுகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் போன்ற பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
முட்டை, தயிர், பால், சோயாமில்க், பனீர், கோழி, மீன், பருப்பு வகைகள் மற்றும் முழு பருப்பு வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளவும். கொண்டைக்கடலை, முந்திரி, முட்டை, கீரை, பருப்பு, பால் என துத்தநாக சத்துள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
அதேபோல, அக்ரூட் பருப்புகள், மீன், ஆளிவிதை, கொட்டைகள் உட்பட ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடவும். ஒரு நாளுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும்.
பருவகால மற்றும் வெவ்வேறு நிறங்கள் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் இருக்கின்றன.