ஹெல்மட்டில் இருந்து படம் எடுத்தப்படி தலையை வெளியே நீட்டும் பாம்பு! இணையவாசிகளை மிரள வைத்த காட்சி
மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் பயன்படுத்தும் தலைக்கவசத்தினுள் ஒளிந்திருந்த பாம்பின் காட்சி இணையவாசிகளை மிறள வைத்துள்ளது.
விலங்குகளின் சேட்டைகள்
தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வியப்பாக இருக்கிறது.
அந்தளவு வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதுடன் பார்ப்பதற்கு திகிலையும் ஏற்படுத்துகிறது. பாம்புகள், பூனைகள் மற்றும் குரங்குகள் தான் இணையவாசிகளை என்டரை்டைம் செய்வதில் முதல் இடத்தை பிடிக்கிறது.
இதனை தொடர்ந்து இணையவாசிகளின் நேரத்தை சுவாரஸ்யமாக ஆரம்பிக்கப்பட்ட சில செயலிகள், தற்போது பணம் சம்பாதிக்கும் ஒரு ஊடகமாக மாறியுள்ளது.
இதனால் நாளுக்கு நாள் வீடியோ ஷேரிங் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன்படி, பாம்பு ஒன்று மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினுள் ஒளிந்திருந்துள்ளது. இதனை கண்டுபிடித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மெதுவாக பாம்பை வெளியில் எடுத்துள்ளார்.
தலைக்கவசத்தில் ஒளிந்திருக்கும் பாம்பு
அப்போது பாம்பு தன் நாக்கை சீறிக் கொண்டு வெளியில் வந்துள்ளது, பார்ப்பதற்கு குட்டி பாம்பாக இருந்தாலும், அதன் சீற்றம் சற்று வீரியம் நிறைந்ததாக இருக்கிறது.
இதனை பார்க்கும் போது தலைக்கவசம் அணியும் போது கவனமாக இருக்க வேண்டும் என்ற முன் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மறைந்திருக்கும் பாம்புகள் கடித்தால் பக்கத்தில் ஆட்கள் இல்லாவிட்டால் உயிர் சேதம் கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் இந்த பாம்பின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், குறித்து பயனரிடம் பாம்பு குறித்து சில கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.