சிலந்தியின் வலைக்குள் சிக்கிய பாம்பின் பரிதாப நிலை! வைரல் காட்சி இதோ
சிலந்தி ஒன்று தனது வலைக்குள் பாம்பு ஒன்றினை சிக்க வைத்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிலந்தி வலைக்குள் பாம்பு
இன்றைய இணைய உலகில் பல காணொளிகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
இங்கும் அவ்வாறு வியக்க வைக்கும் காட்சி ஒன்றினை முன்னாள் கடற்படை அதிகாரி வினோத் குமார் ஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இதுவரை இப்படி ஒரு வீடியோ வெளிவரவில்லை. சிலந்தி தன் வலையில் பாம்பை சிக்க வைத்தது. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதை இது நிரூபிக்கிறது.” என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.
ஆம் மரம் ஏறிய பாம்பு ஒன்று இறுதியில் சிலந்தியின் வலையில் சிக்கித் தவிக்கின்றது. எவ்வளவோ முயற்சித்தும் வெளியே வரமுடியாத குறித்த பாம்பின் நிலையை கண்டு இணையவாசிகள் பரிதாபப்பட்டு வருகின்றனர்.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் என அனைத்தையும் பாடாய் படுத்தும் பாம்பு இவ்வாறு சிக்கிக் கொண்டு தவிப்பது இதுவரை கண்டிராத காட்சியாகவே இருக்கின்றது.
ऐसा वीडियो आज तक नहीं दिखाई दिया. Spider ने अपने जाल में अजगर को फंसा लिया. This proves that we should not under estimate any one. This is rare...
— Vinod Kumar Jha (@vkjha62) September 7, 2022
Part 1 pic.twitter.com/K1xUM0kFAZ