இந்த இலையை தினமும் சாப்பிடுங்க - நாள்பட்ட நெஞ்சு சளி இல்லாமல் போகும்
நாம் தினமும் ஓமவல்லி இலைகளை நமக்கு பிடித்தவாறு சாப்பிட்டால் உடலில் நாள்பட்ட சளியை இது அப்படியே கரைப்பதுடன் இன்னும் பல நன்மைகளை தரும்.
ஓமவல்லி இலைகள்
ஓமவல்லி இலைகளை கற்பூரவள்ளி இலைகள் என்றும் அழைப்பதுண்டு. இந்த இலைகள் இயற்கையில் வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிது. பலரும் இந்த இலைகளின் நன்மை தெரியாமல் அலட்சியம் செய்கின்றனர்.
ஓமவல்லி இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உடலிற்கு தேவையான சத்துக்களையும் அளிக்கின்றது. இந்த இலைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
ஓமவல்லி இலையின் பயன்கள்
சளி இருமல் - இந்த இலைகளில் செய்யப்படும் ரசம், சளி மற்றும் இருமலுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இதில் கார்வாக்ரோல் (Carvacrol) மற்றும் தைமால் (Thymol) போன்ற சளி அகற்றும் பண்புகள் அதிக அளவில் உள்ளன.
இந்த பண்புகள் சளி, தொண்டை வலி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.
சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த இலையை தண்ணீரில் போட்டு அவித்து ஒவ்வொரு நாடும் குடித்து வந்தால் சுவாச பிரச்சனை நீங்கும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் - ஓமவல்லியில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பல தொற்று நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை.
இது, சால்மோனெல்லா டைஃபிமூரியம் (Salmonella Typhimurium), எஸ்கெரிச்சியா கோலை (Escherichia coli) போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்ட சக்திவாய்ந்த பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை (Anti-fungal and Anti-bacterial
properties) கொண்டுள்ளது. இது சரும நோய்கள், வாய்ப்புண், விக்கல், செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று வலி போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
சருமப் பாதுகாப்பு - தலைவலிக்கு நிவாரணம் அளிக்க, ஓமவல்லி இலை சாறை நெற்றியில் தடவலாம். இது காயங்கள், கொப்புளங்கள் மற்றும் சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஓமவல்லி, கொலஜன் உருவாக்கத்தை மேம்படுத்துகிறது, காயங்கள் குணமாகும் காலத்தை குறைக்கிறது.
குறிப்பாக குளிர்காலத்தில், தலைவலி மற்றும் சளி வராமல் தடுக்க ஓமவல்லி இலை எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். இது தலைமுடி பிரச்சனைகள் மற்றும் பொடுகுக்கு சிகிச்சையளிப்பதிலும் பயனளிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
