காலையில் வெறும் வயிற்றில் ஓமத் தண்ணீர் குடிக்கலாமா?
பொதுவாகவே தொன்றுதொட்டு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு எடுத்துக்கொள்ளும் உடன் நிவாரணமாக ஓம வாட்டர் காணப்படுகின்றது.
அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஓம வாட்டரில் எவ்வளவு நன்மை இருக்கிறது என தெரிந்துக்கொள்வோம்.
இரைப்பை பிரச்சினைகள், வயிற்று வலி, செரிமான கோளாறுகள் என வயிறு சார்ந்த எந்த பிரச்சினையான இருந்தாலும் ஓம வாட்டர் குடிப்பது உடனடி தீர்வு கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
இதற்கு சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஓம வாட்டரை பயன்படுத்துவதை விட ஓமத்தை வாங்கி வீட்டில் தயாரித்து குடிப்பது மிகவும் சிறந்த பலன்களை கொடுக்கிறது.
காலையில் எழுந்தவுடன் ஃபிரஸ்சாக சிறிதளவு ஓமத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் குடலில் உள்ள நொதியங்கள் சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடல் எடையை குறைக்க விரும்புவோர் காலையில் வெறும் வயிற்றில் ஓம வாட்டருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்துவர 2 வாரங்களுக்குள் உடல் எடை கணிசமாக குறைகின்றது.
ஓம வாட்டர் குடிப்பதன் மூலம் செரிமானம் சார்ந்த கோளாறுகள் நீங்கி மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.
ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது, அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
மேலும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒமம் சிறந்த மருந்தாகும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் இருக்கும் சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாகவும் விளங்குகிறது.
ஓமத்தை வறுத்து அரைத்து பொடி செய்து இதனைக் கொண்டு துலக்கினால் ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திற்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
மேலும் காய்ந்த இஞ்சியுடன் அரை கப் ஓமம் கலந்து குடிப்பதால் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
இது மார்பில் உள்ள சளியை அகற்றுவது மட்டுமல்லாமல், சளி மற்றும் சைனஸில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
சிறிது ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை வைத்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகின்றது.
தலைவலி மற்றும் உடல் உஷ்ணம்த்தின் காரணமாக ஏற்படும் தொண்டை புண் ஆகியவற்றுக்கு ஓமம் கலந்த தண்ணீர் முகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |