ஒரு டம்ளர் ஓம நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!
Allergy
Asthma
Weight Loss
Constipation
By Kishanthini
ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு அதிசயபொருளாகும்.
இது உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.
அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை சரி செய்கின்றது.
இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.
அந்தவகையில் ஓம நீரை எப்படி செய்வது ? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
எப்படி தயாரிப்பது ?
- 25 கிராம் ஓம விதைகளை முதல் நாள் இரவே ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
- மறுநாள் காலையில் அந்த விதைகளை ஸ்பூன் கொண்டு லேசாக நசுக்கி விட்டு, பின் வடிகட்ட வேண்டும்.
- பின் வேண்டுமானால் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம். பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
என்ன நன்மைகள் கிடைக்கும்?
- தொப்பையை குறைக்க ஓம நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
- உடலின் மெட்டபாலிச செயல்முறை அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் மிற்றும் உடல் பருமன் பிரச்சனையையும் தடுக்கிறது.
- ஓம நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது குடலில் உள்ள நொதிகளை செயல்படத் தூண்டிவிட்டு, செரிமான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி பிரச்சனைளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- உங்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருந்தால், ஓம நீரை தினமும் குடித்து வரலாம்.
- உங்களுக்கு சருமத்தில் கொப்புளங்கள் மற்றும் அரிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில் ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து தடவுங்கள். இதனால் அரிப்புக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US