ஆக்ரோஷமாக சாமி வந்து ஆடிய பெண்....பதறி ஓடி செவிலியரின் பரிதாப நிலை
சாமிக்கே கொரோனா ஊசியா என பாட்டி ஒருவர் செவிலியர்கள் முன் சாமியாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் பகுதியில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை செவிலியர், ஆஷா பணியாளர், அங்கன்வாடி ஊழியர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட வந்த சுகாதாரத்துறை ஊழியர்களை மூதாட்டி ஒருவர் சாமியாடி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— M.Govindaraji (@RJGovind104) December 1, 2021
அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது#Puducherry #Corona #CoronaVirus pic.twitter.com/X1OyeWOkpV
அப்போது தட்சிணாமூர்த்தி நகரில் வசித்து வரும் ஒரு வயதான தம்பதியின் வீட்டுக்கும் சென்றுள்ளனர்.
அங்கு இருந்த முதியவர்கள் எங்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டோம் என கையெடுத்து கும்பிட்டுள்ளனர்.
செவிலியர்கள் கொரோனா வைரஸ் ஆபத்து குறித்து என்ன தான் சொன்னாலும் அந்த முதியவர்கள் தொடர்ந்து வேண்டாம், வேண்டாம் போங்கள் என்றும் விரட்டியுள்ளனர்.
சிறிது நேரம் ஆனா பின்பு வீட்டின் உள்ளே நின்று பேசிகொண்டிருந்த பாட்டி சாமி வந்து 'மாரியம்மா, அங்காளம்மா ஆகாதுன்னு சொல்றேன் எனக்கே ஊசி போட வரியா?' என கத்தியுள்ளார். அதோடு, செவிலியர்கள் அங்கிருந்து செல்லும் வரை அந்த பாட்டி சாமியாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.