எந்த உணவும் இல்லாமல், 50 வருடங்களாக வெறும் ஹார்லிக்ஸ் குடித்து உயிர் வாழும் அதிசய பாட்டி!
உலகில் விநோதமாக சம்பவங்கள் பல இடங்களில் நடந்துக் கொண்டிருக்கதான் செய்கிறது.
அவ்வாறுதான் 50 ஆண்டுகளாக எந்த உணவும் இல்லாமல் வெறும் ஹார்லிக்ஸ், டீ மாத்திரம் குடித்து ஒரு பாட்டி உயிர்வாழ்ந்து வருகின்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் பாட்டி
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பெல்டிஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் அனிமா சக்ரவர்த்தி என்ற 76 வயது மூதாட்டி.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளமை பருவத்தில் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி கொடுத்திருக்கிறார்.
இவர் சில வீடுகளில் வேலை பார்க்கும் போது வீட்டில் இருக்கும் உணவைக் கொடுப்பார்கள். ஆனால் அவர் தேநீர் மற்றும் சத்தான திரவ பானங்கள் மட்டுமே சாப்பிட்டார். இதற்குப் பழகிய அனிமா உணவு உண்பதை நிறுத்தினார்.
கடந்த 50 ஆண்டுகளாக திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமமே ஆச்சரியமடைந்துள்ளனர்.
அனிமாவின் மகன் இளமையில் தனது தாய் சந்தித்த வறுமையே தனது தனித்துவமான வாழ்க்கைக்குக் காரணம் என்று கூறுகிறார்.
மருத்துவ பரிசோதனை
இந்த பாட்டியின் உடல் செயல்பாடு குறித்து மருத்துவர் கூறுகையில்,
“எங்கள் உடலுக்கு ஆற்றல், கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உணவு போன்ற உணவில் இருந்து மட்டுமின்றி திரவ உணவிலும் தேவைப்படுகிறது.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது அல்ல, அதில் தேவையான சத்துக்கள் உள்ளதா என்பதுதான்.
திரவ உணவில் கிடைத்தால் ஒருவர் நன்றாக வாழலாம். கோமா அல்லது ஐசியுவில் உள்ள அனைத்து நோயாளிகளும் கடுமையான சூழலில் திரவ உணவை உட்கொள்கின்றனர்.
எனவே, வயதான பெண்ணின் உடல்நிலையைப் பார்த்து அறிவியல் ரீதியாக ஆச்சரியப்படத் தேவையில்லை” என்கிறார்.
இந்த விடயம் பல மக்களை ஆச்சரமடைய வைத்துள்ளது.