19 வயது இளைஞருடன் சேர்ந்து 34 வயது பெண் செய்த காரியம்... பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி.. பகீர் வாக்குமூலம்
தனது காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கம்பியால் அடித்த மனைவியின் வாக்குமூலம் நடுநடுங்க வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள கீரனூரை சேர்ந்தவர் தண்டபாணி(35). இவரது மனைவி தேவி(34). ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தள்ளுவண்டியில் பழக்கடை போட்டு வந்துள்ளார்.
தாராபுரத்தில் வியாபாரம் செய்துவிட்டு, நைட் நேரத்தில் கீரனூர் சென்று விடுவார்கள். சில சமயம், தண்டபாணி மட்டும் கீரனூர் செல்வார். தேவியின் வீடு அங்கேயே தாராபுரத்தில் உள்ளதால், அங்கு போய் தங்கிவிடுவாராம். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தேவி மட்டும் கீரனூர் வந்த நிலையில் தண்டபாணி மட்டும் வராததால் அக்கம் பக்கத்தினர் விசாரித்துள்ளனர்.
அதற்கு தேவி வெளியூர் சென்றுள்ளதாக சமாளித்துள்ளார். பின்பு காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளதால், சந்தேகம் அடைந்த பொலிசார் தேவியை விசாரித்துள்ளனர். அப்பொழுது தேவியின் பல திருவிளையாடல்கள் ஒட்டுமொத்தமாக அம்பலமாகியுள்ளது. தனது அம்மா வீட்டு பக்கத்திலேயே அபிஷேக்(19) என்ற இளைஞர் வசித்து வந்துள்ள நிலையில், வியாபாரம் முடித்து வரும் வழியில் அவருடன் பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இது கணவருக்கு தெரியவந்த நிலையில் அவரும் கண்டித்துள்ளார்.
இருந்தும் இவர்கள் பழக்கத்தினை விடாமல் இருந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் கீரனூர் வீட்டில் இருந்த போது கணவர் அவதானித்ததால் இருவரும் ஆத்திரமடைந்த நிலையில், கணவர் முகத்தினை பாலீத்தின் பையை வைத்து மூடி கயிற்றினால் கட்டி, கம்பியினால் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.பின்பு சடலத்தினை மூட்டைகட்டி பாலடைந்த கிணறு ஒன்றில் போட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். தற்போது இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.