பூமிக்கு ஏற்படவுள்ள ஆபத்து: எச்சரிக்கும் அமெரிக்க பாதுகாப்புத் துறையினர்!
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்ட செயற்கை கோளால் பூமிக்கு ஆபத்து ஏற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை கோள்
1984ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் திகதி அமெரிக்காவின் நாசா குழுவினரால் இ.ஆர்.பி.எஸ் எனப்படும் Earth Radiation Budget Satellite (ERBS) செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பட்டது.
பூமியானது சூரியனிலிருந்து ஆற்றலை எவ்வாறு உறிஞ்சி, கதிர்வீச்சு செய்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதற்கே இச் செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இச்செயற்கைக் கோளானது கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இக்கோளானது 2,450 கிலோ எடைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு ஆபத்தா?
குறித்த செயற்கைக் கோளானது தனது பணியை முடித்து விட்டு பூமிக்கு திரும்பவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கணிப்பின்படி இச் செயற்கைகோள் இந்திய நேரப்படி இன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து அழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும். இக்கோள் வளிமண்டளத்தில் நுழையும் போது வானில் முற்றிலும் எரிந்து விடும். மீறி அதன் உதிர்ப்பாக பகுதிகள் பூமியில் விழுந்தாலும் அது 9,400 இல் ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கணக்கிட்டுள்ளது.
செயற்கைகோள் தனது பயண நாட்களில் ஸ்ட்ராடோஸ்பெரிக் ஓசோன், நீராவி, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் ஏரோசோல்களையும் அளவீடு செய்துள்ளது.
NASA’s retired Earth Radiation Budget Satellite (ERBS) is expected to reenter Earth’s atmosphere after almost 40 years in space.
— NASA Earth (@NASAEarth) January 6, 2023
The @DeptofDefense currently predicts reentry at approximately 6:40 pm EST on Jan. 8.https://t.co/3VKDIqDh0X pic.twitter.com/WDpxOC3Hl4