சிப்ஸ் பாக்கெட்டால் வந்த வினை... 75 வயது முதியவர் மீது பற்றிய நெருப்பு
அமெரிக்காவில் சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்க முயன்ற நிலையில் தீவிபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிப்ஸ் பாக்கெட்டால் வந்த வினை
அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றினை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சாப்பிடுவதற்கு முயன்றுள்ளார்.
சிப்ஸ் பாக்கெட்டை கைகளால் பிரிக்க முயற்சித்து முடியாததால், சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை பயன்படுத்தி சிப்ஸ் பாக்கெட்டை பிரிக்க முயற்சித்துள்ளார்.
அப்பொழுது தவறுதலாக அவர் மீது தீப்பிடித்து எறிய ஆரம்பித்துள்ளது. முதியவரின் அலரல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையடு்த்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |