60 வயது முதியவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்வதாக அராஜகம்... காரணத்தைக் கேட்டு கதறும் 90'S கிட்ஸ்
ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சோப்ரான் சிங் .
60 வயதான இவர் திடீரென சுமார் 11000 வோல்டேஜ் உள்ள எலக்ட்ரிக் கம்பத்தின் ஏறத் தொடங்கியுள்ளார். ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான சோப்ரானின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே, இரண்டாவது திருமணம் செய்துவைக்குமாறு குடும்பத்தினர் கூறி தகராறு செய்துள்ளார். பேரன் பேத்தி பார்த்த வயதில் இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதனால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற இவர், இவ்வாறு மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
குறித்த நேரத்தில் மின்சாரம் வராத காரணத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ள நிலையில், மின் வாரிய ஊழியர்கள் வந்து, மின்சாரத்தினை துண்டித்து அவரை கீழே இறக்கியுள்ளனர்.