இந்த நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பயங்கர எதிர்பார்ப்பில் மக்கள்
பிரபல கால் டாக்சி நிறுவனமான Ola, அண்மையில் அதன் புதுமுக மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அதில், S1 மற்றும் S1 Pro ஆகிய இருவிதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தமிழகத்தின் ஓசூரில் வைத்து நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கின்றது.
இதற்காக 500 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான உற்பத்தி ஆலையை நிறுவனம் கட்டமைதத்து வருகின்றது. மிக விரைவில் உற்பத்தி ஆலை கட்டமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.
இதைத் தொடர்ந்து, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்கும் பணியை ஓலா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து, இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு மட்டுமின்றி வேறு நாட்டவர்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாக நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
இதைப்பற்றி, நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, "மிக விரைவில் தங்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருக்கின்றோம்.
அடுத்த ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷிப்பிங் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார். டுவிட்டர் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார்.