ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் Okacet மாத்திரைகள்
ஒவ்வாமை மற்றும் அலர்ஜி பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது Okacet மாத்திரைகள்.
ஆன்டிஹிஸ்டமைன் பண்புகள் கொண்ட Okacet மாத்திரைகள், கண்ணில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல், தும்மல், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Okacet மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுப்பது ஆபத்தை உண்டு பண்ணலாம்.
எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி Okacet மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள் மற்றும் தொந்தரவுகள் இருக்கும்வரை மருத்துவர் பரிந்துரைத்த கால அளவுகளில் எடுக்கவும், அதிகமாகவோ தொடர்ச்சியாகவோ பயன்படுத்த வேண்டாம்.
இது பெரும்பாலனவர்களுக்கு பக்கவிளைவுகளை உண்டு பண்ணாத என்ற போதிலும் சில நேரங்களில் தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும், இரண்டு நாட்களில் உங்களது உடல் மருந்துகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிவிடும்.
வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
Okacet மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுத்துக்கொள்ளக்கூடாது.
சிறுநீரக வியாதி இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று Okacet மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
வேறு ஏதேனும் நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |