மாரடைப்பு அபாயத்தை தூண்டும் எண்ணெய்- இனி மறந்தும் சாப்பிடாதீங்க!
தற்போது நாளுக்கு நாள் உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகமாகி வருகின்றது. இந்த பிரச்சனைகளை தீவிரமாக எடுத்து கொள்வது நமது கடமையாகும்.
ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் முதலில் அவர்களின் உணவு பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனின் ஆபத்தான நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் மரணம் வீதம் அதிகமாகிறது. அத்துடன் ஆயுட்காலமும் குறைகிறது.
அதிலும் குறிப்பாக பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்க கட்டாயம் முயற்சிக்க வேண்டும். இது தான் ஆபத்தான நோய்களின் முக்கிய காரணியாகும்.
கடைகளில் அல்லது வீடுகளில் பொரித்த உணவுகள் அதிகமாக எடுத்து கொண்டால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் கட்டாயம் உங்களை தாக்க வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், சமையலுக்கு கூட குறிப்பிட்ட சில எண்ணெய்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் கடைகளில் நிறைய எண்ணெய்கள் இருப்பதால், எவற்றை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
அந்த வகையில், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கும் எண்ணெய்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்கும் எண்ணெய்கள்
1. ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம். ஏனெனின் இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிரம்பியுள்ளது, இது எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து உடலில் உள்ள எச்டிஎல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அத்துடன் இந்த எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
2. அவகேடோ எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் உள்ள எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும். ஏனெனின் இந்த எண்ணெயில் தாவரங்களில் உள்ள பைட்டோஸ்டெரால் உள்ளது. அத்துடன் அவகேடோ எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கனோலா எண்ணெய் குறைக்கிறது. இதய நோய் அபாயம் இருப்பவர்கள் இந்த எண்ணெய் உணவு சமைத்து சாப்பிடலாம். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால் வீக்கத்தை எதிர்ப்பு போராடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |