ஆண்களுக்கு தாடி கிடுகிடுவென வளர வேண்டுமா? இந்த எண்ணெய்யை தேய்த்து வாருங்க...
பொதுவாக ஆண்களுக்கு தாடி வளர்ப்பது என்றால் ரொம்பவே பிடிக்கும். பலரும் தாடியை புதர் போல் வளர்த்துவிட்டு அதற்கு முறையான பராமரிப்பை செய்ய தவறிவிடுவார்கள். சரியான பராமரிப்பு இல்லையென்றால் முகத்தின் அழகு, தோற்றமும் மாறிவிடும்.
தாடிக்கு அழகும் ஆரோக்கியமும் சேர்ப்பதற்கு எண்ணெய் வகைகள் மிகவும் பயனுள்ளதாக இருகிறது. எண்ணெய்யானது, மென்மையாகவும் அழகாகவும் மாற்றி கன்னங்களையும் ஈரப்பதத் தன்மையுடன் வைத்திருக்க உதவும்.
தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை ரசாயன கலப்பு இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துவிடலாம்.
யூக்கலிப்டஸ் எண்ணெய்
இந்த எண்ணெய்யில் அதிகமாக பாக்டீரியா மற்றும் நோய் அழற்சி பண்கள் உள்ளது. இந்த எண்ணெய்யால் வேகமாக தாடி வளரவும் உதவுகிறது.
ஒரு பாட்டிலில் 6 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து 3-4 அல்லது நான்கு சொட்டுகள் கலந்து, ஈரமான துணியால் முகத்தை துடைத்தபின், எண்ணெய்யை முகத்தில் தேய்த்து தாடியில் மசாஜ் செய்யவும். அதன்பின்னர், அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தாடியை கழுவிவிடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யை 50 மில்லி அளவு எண்ணெய்யுடன் சேர்த்து பத்து சொட்டு அளவு ரோஸ்மேரி எண்ணெய் அல்லது லாவண்டர் எண்ணெய்யுடன் கலந்துகொள்ளவும். இந்த வாசனை மிக்கது.
இரவில் தூங்க செல்லும் முன்பு சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி மிதமாக சூடாக்கி தாடியில் சேர்த்து மசாஜ் செய்யவும். காலையில் எழுந்ததும் குளிக்கும்போது தாடியை கழுவிவிடலாம். தாடி மென்மையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.
டீட்ரீ எண்ணெய்
டீ -ட்ரீ எண்ணெய்யானது தாடிக்கு பயனுள்ள எண்ணெய்யாகும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. தாடியை அடர்த்தியாகவும், ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும், சரும நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். 50 மி.லி பாதாம் எண்ணெய்யுடன் 8 சொட்டு டீ-ட்ரீ எண்ணெய் கலந்து கொள்ளவும். அதன்பின்னர், தாடியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்யவும். கால் மணி நேரம் கழித்து முகத்தை நீரில் கழுவிவிடலாம்.