சிவலிங்கத்தில் ஊற்றிய எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்.., கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம்பள்ளியில் சிவன் கோவில் ஒன்று உள்ளது.
இந்தக் கோவிலில் நேற்று பூசாரி சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்தார்.
அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய், பால் போல் மாறி வழிந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

இந்த தெய்வீக அதிசய நிகழ்வால் அந்த சிவன் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில், சிலர் இதுகுறித்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கான காரணம் குறித்து இதுவரை அறிவியல் பூர்வமான விளக்கம் அல்லது அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை.