வருடத்தின் 10ஆம் மாதம் ... அக்டோபர் மாதம் சிக்கலில் சிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள்...
2023ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகப் போகிறது. இந்நிலையில் இந்த அக்டோபர் மாதம் ஏற்படும் கிரக மாற்றங்களால் 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்பட இருக்கிறது.
இந்த மாதத்தில் கிரக நிலை மற்றும் கடவுளின் அருள் நிறைந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது அப்படியான ராசிக்காரர்கள் யார்யார் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்
இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் காதல், திருமண விடயத்தில் சில பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பவற்றை சந்திக்க நேரிடும். மேலும், நிதி பிரச்சினைகள் ஏற்படும். திடீர் பயணங்களால் அலைக்கழிப்பு ஏற்படும். ஆரோக்கியப் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அதிக வேலை அழுத்தம் இருக்கும். தொழில் ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க நேரும். தனிப்பட்ட உறவுகளிலும் சில சிக்கல் ஏற்படும். மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிதிப்பிரச்சினைகளை சந்திக்க நேரும். உறவினர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியில் நற்பலன்கள் இருக்கும். வேலையில் தீவிரமான ஆர்வம் மற்றும் உற்சாகம் இருக்கும். அதிக பயணங்களால் சோர்வை அனுபவிப்பீர்கள். நிதிப்பிரச்சினைகளில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும் வேலையில் கவனம் இல்லாமல் போகலாம். நீண்ட காலமாக திட்டமிட்டு வைத்திருந்த திட்டங்கள் தடைப்படும். தேவையற்ற நஷ்டங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. உறவுகளிடம் பொறுமை மற்றும் பொறாமை அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |