சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது?
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
உடலில் சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்கும் ஓட்ஸ் இட்டி எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
ரவை - 1 கப்
பேக்கிங் சோடா - 1 தே. கரண்டி
உளுந்து - 1 தே. கரண்டி
கடுகு - 1 தே. கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தே. கரண்டி
இஞ்சி - 1( பொடியாக நறுக்கியது)
தயிர் - அரை கப் (புளித்தது)
தேங்காயைத் துருவல் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
பீன்ஸ், கேரட் - பொடியாக நறுக்கியது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ரவை மற்றும் துய்மையான தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதை ஒட்ஸ் இட்லிக்காகக் கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலந்ர்விட்டுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலந்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் அல்டிமேட் சுவையில் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் இட்லி காலை உணவுக்கு மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |