இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிட்டால் பலன் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
ஓட்ஸ் தோசை
எனவே ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இந்த ஓட்ஸை தோசையாக செய்து சாப்பிட்டால்..? எப்படி இருக்கும்.. உடலுக்கு ஆரோக்கியமானதா என்பதை பார்ப்போம்.

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் குறைகிறது. இதில் கலோரிகளும் குறைவாகவே உள்ளன. இதன் விளைவாக, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
என்ன பலன்?
இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே ஓட்ஸ் தோசையை நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.

காலை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இதனுடன் வெங்காயம், கேரட், கீரை போன்ற காய்கறிகளைச் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மசாலா இல்லாமல் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓட்ஸ் தோசை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். புரதம் நிறைந்துள்ளது, எனவே கொழுப்பு எரிக்கப்படுகிறது. தசைகள் வலுப்பெறும். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.