டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான்.
நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது.
இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.
டாபர்மேன் நாய்
பழங்கால ரேபிஸ் நோயில் இருந்து டாபர் மேன் நாய்களின் வால்கள் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக ஒரு தகவல் இருக்கிறது. இதற்கான காரணம் ரேபிஸ் நோய் இந்த நாய்களை பாதிக்காதாம்.
ஆனால் இது அறிவியல் பூர்வமாக ஆதாரம் கிடைக்கவில்லை. இந்த நாய்கள் வேட்டை நாய்கள் என்பதால் இதை எப்போதும் கோபத்துடன் வைத்திருப்பதற்காக இந்த நாயின் வால்கள் வெட்டப்படுகிறது என்ற ஒரு தவறான கூற்று உள்ளது.
ஆனால் இது உண்மை இல்லை உண்மையில் டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.
டாபர்மேன் மெல்லிய வால் அமைப்பை கொண்டவை. அவை எளிதில் அடிப்பட்டுவிடும். இதன் காரணமாகவே டாபர்மேன் நாய்களுக்கு வால்கள் வெட்டப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.