Kambu Laddu: குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கம்பு லட்டு இதை இப்படி செய்து பாருங்கள்!
நாம் உண்ணும் உணவில் ஒரு நாளுக்கு ஒரு தானியத்தை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு தானியங்களை உணவில் சேர்த்து கொடுத்தால் அது அவர்களின் உடலுக்கு நிறைய சத்துக்களை கொடுக்கின்றது. தானியங்களில் மிகச்சிறந்ததாக கம்பு காணப்படுகின்றது.
கம்பு தானியத்தில் கார்போஹைட்ரேட் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதை உணவில் சேர்த்து கொள்வதால் மலச்சிக்கல் வருவதை தடுத்து சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்குகிறது. இவ்வளவு நன்மை தருகின்ற தானியத்தை நாம் உணவாக எடுத்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் இந்த தானியத்தை வைத்து எவ்வாறு லட்டு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- நிலக்கடலை - அரை கப்
- நெய் - தேவையான அளவு
- முந்திரி - 50 கிராம்
- ஏலக்காய் - 2
- வெல்லம் - 1 கப்
செய்யும் முறை
கம்பு தானியத்தை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அது சூடாக்கியதும் கம்பை பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நிலக்கடலையை தனியாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த கம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த கம்பு பொடியை தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். பின்னர் நிலக்கடலையை அரைத்து எடுத்து கொள்ளவும்
பின்னர் வெல்லத்தை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
பின்னர் கம்பு பவுடர், நிலக்கடலை, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இது மிதமான சூட்டில் இருக்கும் போதே உருண்டைகளாக பிடித்து எடுத்தால் சுவையான கம்பு லட்டு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |