எந்தெந்த உணவுகளில் என்னென்ன சத்து நிறைந்திருக்கிறதுன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்
எந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். பல நிறங்களில் உள்ள பழங்கள், காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றன.
பழங்கள், காய்கறிகளை நாம் சாப்பிடுவதன் மூலம் இதய நோய், வகை 2 நீரிழிவு, புற்றுநோய் ஆகியவை வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். சரி வாங்க.. எந்தெந்த உணவுகளில் என்னென்ன பலன்கள் இருக்கின்றன என்று பார்ப்போம் -
பீட்ரூட்
மிகவும் மிலிவாக கிடைக்கும் பீரூட்டில் அதிகப்படியான ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் இருக்கிறது. பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
ஒமேகா 3 கொழுப்பு இதயத்திற்கு பல நன்மைகளை செய்கின்றன. இவை ஆரோக்கியமான கொழுப்பு அமிலமாகும். ஒமேகா -3 நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் வீக்கம், தமனிச் சுவர்களை குணப்படுத்தும்.
ஆர்கானிக் தேநீர்
ஆர்கானிக் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடம்பில் தேங்கியிருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மேலும், தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கும்.
பூண்டு
பூண்டை தினமும் நாம் சாப்பிட்டு வந்தால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மேலும், இரத்தத்தை மெலிதாக்கும் பொருளாக செயல்படும்.
எண்ணெய்கள்
தினமும் நாம் உணவில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். மேலும், கடுகு எண்ணெய் உடம்பில் ஏற்படும் வீக்கதை போக்க உதவி செய்யும்.
பழங்கள்
தினமும் நாம் திராட்சை, மாதுளை, பெர்ரிகளை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி ஆக்செடெண்ட் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தோடும், வலிமையோடும் இருப்போம்.
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ உள்ள உணவுப் பொருட்களை நாம் சாப்பிட்டு வந்தால், அவை நம் உடம்பில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். தமனிகளை குணப்படுத்தச் செய்யும். சூரியகாந்தி விதைகள், உப்பு சேர்க்காத வேர்க்கடலை, வெண்ணெய், பாதாம், எள் ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |