தலைமுடி வளர கண்டதையும் தடவாம இந்த ஒரே ஒரு பொருள் போதும்....அதிசயம் நடக்கும்!
நீளமான முடி வேண்டும் என்பது பலரது கனவு.
சந்தையில் முடி வளர்ச்சியில் உதவக்கூடிய சில பொருட்கள் உள்ளன.
ஆனால் பெரும்பாலும் அவை உங்களுக்கு நிரந்தரமான தீர்வை தருவதில்லை. இயற்கையான முறையில் முடி வளர முயற்சி செய்யும் போது பலன்கள் அதிகமாக கிடைக்கிறது.
உங்களுக்கு இந்த குறிப்ப உதவும்.

மருதாணி பேக்
மருதாணி என்பது நன்றாக அறியப்படும் இயற்கை கண்டிஷனராகும். முடி வளர்ச்சிக்கும் இது நல்லதாகும்.
மந்தமாக மற்றும் வறண்டு காணப்படும் முடியை வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் மாற்ற இது உதவும்.
மேலும் நிறங்களையும் அளிக்கும். முடியின் வேரை திடப்படுத்தி, அதன் மூலம் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
பயன்படுத்தும் முறை
1 கப் காய்ந்த மருதாணி பொடி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ½ கப் தயிரை ஒன்றாக கலந்து, பேக் ஒன்றை தயார் செய்யவும்.
இதனை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும். முழுமையாக காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
மிதமான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.