செவிலியரின் அலட்சியம்... குழந்தையின் கட்டைவிரல் வெட்டப்பட்ட கொடுமை
செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் பெருவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.
இக்குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால், தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக கையில் பிளாஸ்டர் போடப்பட்டு இருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானதால், டிஸ்சார்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டரை எடுக்க செவிலியர் கத்தரிக்கோலால் முயற்சித்த போது தவறுதாக குழந்தையின் கட்டை விரலை வெட்டியுள்ளார்.
குழந்தையின் விரல் பெரும்பகுதி வெட்டப்பட்டதால், பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். பின்பு குழந்தையின் விரலை சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா என்பது இரண்டு நாட்களுக்கு பின்பே தெரியவரும் என்று கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

