4 வருடங்களாக கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்! அதிசயம்
அன்றாடம் எங்காவது அதிசய நிகழ்வுகள் நடந்த வண்ணம்தான் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் மிசோரி என்ற சிறிய நகரத்தில் கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் 4 ஆண்டுகளாகியும் அப்படியே இருக்கிறது.
வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019ஆம் ஆண்டு தனது 95ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடல் ஒரு மரச் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதனை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
image - money cntrol
சவப்பெட்டியை திறந்த கன்னியாஸ்திரிகளுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் 4 ஆண்டுகளாகியும் அவரது உடல் கெடாமல் அப்படியே இருந்தது.
அவரது தலைமுடி, உதடு, கண்கள், மூக்கு என்பன எதுவித சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது. பொதுவாக ஒருவரை அடக்கம் செய்தால் சில மாதங்களிலேயே உடல் அழுகி, எலும்புக்கூடாக மாறிவிடும்.
ஆனால், இவரது உடல் எதுவும் ஆகாமல் அப்படியே இருக்கின்றது. இதனால் உடலை பொதுமக்களின் பார்வைக்காக வைக்க உள்ளனர். அதன் பின்னர் அடக்கம் செய்யப்படும்.
image - newyork post