நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் நுங்கு பாயசம்... எப்படி செய்யணும் தெரியுமா?
நுங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
நுங்கு அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் பாயசமாக்கி சாப்பிட்டாலும் ஆரோக்கியம் தடையில்லாமல் கிடைக்கும்.
நுங்கு பாயசம் செய்முறை
- நுங்கு- 10
- பால்- 6 கப்
- வெல்லத்தூள் - இனிப்புக்கேற்ப
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் - 5 டீஸ்பூன் (தேவையெனில் )
- குங்குமப்பூ தேவைக்கு ஏற்ப
- ஏலத்தூள் - சிட்டிகை
செய்முறை
நுங்கை தோல் உரித்து எடுக்கவும். நுங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
குழந்தைக்கு கொடுக்கும் போது மிக்ஸியில் மசித்து கலக்கலாம். பாலில் குங்குமப்பூவை கலந்து மிதமான தீயில் வைத்து அவை பாதியாக வற்றும் வரை சூடாக்கவும்.
அடுப்பை அணைத்து பாலை நன்றாக ஆற்றுங்கள். இந்த பாலுடன் இனிப்புக்கேற்ப வெல்லத்தூள் கலந்து கொள்ளவும்.
இதனுடன் டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் கலந்து விடவும். பிறகு நறுக்கிய அல்லது மிக்ஸியில் அரைத்த நுங்கு சேர்த்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பரிமாறவும். குறிப்பு ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நுங்கை இப்படி கொடுக்கலாம்.
குழந்தைக்கு கொடுக்கும் போது இளம் நுங்காக கொடுக்க வேண்டும்.
நுங்கின் நன்மைகள்
- கோடைக்காலத்தில் நுங்கு எடுப்பது உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்கும்.
- உடலில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும்.
- வயிற்றுக்கோளாறுகள் உண்டாவதை தடுக்கும் மருந்தாக செயல்படுகிறது.
- கோடையில் மட்டும் வரக்கூடிய அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கின்றது மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் நுங்கு எடுத்து வரும் போது இது கடினமான மலத்தை இளக்கி வெளியேற்றும்.
- செரிமானம் சீராவதால் இது வயிற்றில் நல்ல பசியை தூண்டும்.
- கோடைக்காலத்தில் தாகம் தணிக்கும் உணவாக நுங்கு சேர்க்கலாம்.
- அல்சர், இரைப்பை மற்றும் குடல் புண் உள்ளவர்களுக்கு நுங்கு சிறந்த மருந்து.
- கோடையில் வியர்க்குரு பிரச்சனை வந்தால் அதற்கு நுங்கு நீரை தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
- இது இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது இதனால் நீரிழப்பு ஏற்படாமல் போராட உதவும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை.
- இது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது.
- வயிற்று கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
- இதில் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் இது வயதான செயல்முறையை தாமதப்படுத்த செய்கிறது.