அந்த குழந்தைகளை விட்டுருங்க! என் உயிரை எடுத்துக்கோங்க! ராணுவத்தினர் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி
மியான்மரில் போராட்டக்காரர்களை விட்டு விடும்படி கூறி, கன்னியாஸ்திரி ஒருவர் பொலிசார் முன் மண்டியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்தது. இதனால், மியான்மர் அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைக்க, இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, நாட்டில் நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது.இராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 50-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் மியான்மரின் வடக்கு நகரான மைட்கினாவில் நடந்து வரும் இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, கன்னியாஸ்திரி ஒருவர், அந்த குழந்தைகளை, அதாவது போராட்டக்காரர்களை விட்டுவிடுங்கள், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பொலிசார் மண்டியிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், போராட்டக்காரர்களை நோக்கி பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டக்காரர்கள் அதைக் கண்டு ஓடினர். இதன் காரணமாகவே நான் அவர்களது முன் மண்டியிட்டு அந்தக் குழந்தைகளைச் சுட்டு விடாதீர்கள். அவர்களை விட்டுவிடுங்கள், அவர்களுக்கு பதிலாக என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி இப்படி கூறும் போது, அங்கிருந்த பொலிசார் இருவர் கை கூப்பி இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Myanmar nun pleads with the military, begs for mercy.
— IndiaToday (@IndiaToday) March 10, 2021
"I knelt down... begging them not to shoot and torture the children, but to shoot me and kill me instead," the nun was quoted as saying.#Myanmar #Myanmarcoup #Nun #MyanmarNun #ITVideo pic.twitter.com/MBEOdUrX4l