சவால்களை தாண்டி சாதிக்க பிறந்தவர்கள் இந்த எண் தானாம் - வெற்றி உறுதி
தைரியம், ஆற்றல் மற்றும் கடின உழைப்பைக் குறிக்கும் ஒரு எண் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகின்றனர்.

எண்கணிதம்
எண் கணிதத்தின்படி, நாம் பிறந்த தேதியை வைத்து நமது எதிர்காலம் முதல் நமது குணாதிசயம் வரை எல்லாம் தெளிவாக கூற முடியும் எனப்படுகின்றது.
ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் ஒரு மூல எண் உள்ளது. எண் கணிதத்தின்படி இந்த ஒவ்வொரு மூல எண்ணிற்கும் ஒரு கிரகம் தொடர்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூல எண் 9 ஆகவும் கருதப்படுகிறது. இந்த எண்ணை ஆளும் கிரகம் செவ்வாய். எனவே இந்த மூல எண்ணைக் கொண்டவர்கள் தைரியமும் ஆற்றலும் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் சவால்கள் வரும் அந்த சவால்களை முறியடிக்கும் திறன் இவர்களுக்கு மட்டும் தான் உள்ளது என கூறப்படுகின்றது. அந்த வகையில் மூல எண் 9 கொண்டவர்களைப் பற்றிய சிறப்பு விஷயங்களை பார்க்கலாம்.

9 உடையவர்களின் குணங்கள்
- கோள்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், 9 ஆம் எண்ணை ஆளும் கிரகமாகும். செவ்வாயின் ஆற்றலால் இந்த தேதியில் பிறந்தவர்கள் அச்சமற்றவர்களாகவும் தைரியமானவர்களாகவும் இருக்கிறார்கள்.
- இவர்கள் எந்த ஒரு வேலையைச் செய்யத் தீர்மானித்தாலும், அதை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
- வாழ்க்கையில் என்னென்ன சவால்கள் வந்தாலும், அவர்கள் ஒருபோதும் மனம் தளர மாட்டார்களாம்.
- மற்றவர்கள் அவர்களுக்கு சவால்கள் வரும் போது அதை பார்த்து சோர்வடைவார்கள் இல்லை என்றால் அதை விட்டு விலகி செல்வார்கள். ஆனால் 9ம் எண்ணில் பிறந்தவர்கள் அந்த சவால் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை முறியடிப்பார்கள்.

- அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் அவர்களை உறுதியாக்குகிறது. அவர்களின் மிகப்பெரிய குணம் என்னவென்றால், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்களாம். இதனால் வீழ்ந்த பிறகும், முன்பை விட அதிக பலத்துடன் மீண்டும் எழுந்து நிற்பார்கள் எனப்படுகின்றது.
- அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் தங்களின் கடின உழைப்பால் அவர்கள் தங்கள் விதியை முற்றிலுமாக மாற்றும் சக்தி கொண்டவர்கள்.
- இந்த மக்கள் வெளித்தோற்றத்தில் கடினமானவர்களாகத் தோன்றலாம், ஆனால் உள்ளுக்குள் மிகவும் மென்மையானவர்கள்.
- மற்றவர்கள் கஷ்டப்படுவதை இவர்களால் பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது. இவர்கள் ஒழுக்கத்தை விரும்பும் நபர்கள் மற்றும் நேரத்தை வீணடிப்பதை அறவே விரும்ப மாட்டார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).