நீங்க 1 ஆம் எண் எண்ணில் பிறந்தவரா? இந்த அசுர குணம் இருக்குமாம்... உங்க பலம் என்ன தெரியுமா?
எல்லா எண்களுக்கும் ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது.
நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சிசெய்கிறார்.
இந்த அசுர குணம் இருக்குமாம்
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலைவாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும்அவர்களுடன் நடந்த கொள்வார்கள்.
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.
அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள்.
மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள்.
தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத்துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள்.
புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்றஎண்ணம் கொண்டவர்கள்.