நீங்கள் பிறந்த திகதி இதுவென்றால் உங்கள் அதிஸ்ட எண் என்ன தெரியுமா?
நியூமெராலஜி படி நாம் பிறந்த திகதியை வைத்து நமக்கு எந்தெந்த அதிஸ்ட எண்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிஸ்ட எண்
எண் கணிதத்தின் படி சில அதிர்ஷ்ட எண்கள் பிறந்த தேதியுடன் தொடர்புடையவையாகும். இந்த அதிர்ஷ்ட எண்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வைத்திருப்பதால் உங்களுக்கு நல்லது நடக்கும் எனப்படுகிறது.
நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் உங்களுக்கு 1,2, 9 போன்ற எண்கள் அதிஸ்டத்தை தரும்.
இந்த இலக்கங்களை உங்களுடன் வைத்திருந்தால் உங்களுக்கு நல்லிணக்கமும், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால் உங்களுக்கு 4, 5 அல்லது 6 சேர்ப்பதன் மூலம் நிலைத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, சமநிலையை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2,3,4,9 ஆகிய எண்களை அதிர்ஷ்டமாக கொண்டுள்ளதால் இவர்கள் இந்த எண்ணை அருகிலேயே வைத்திருக்க வேண்டும்.
இதனால் நேர்மறை சிந்தனைகளை கொண்டு வரும்.5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 1,6 எண் அதிர்ஷ்டமாக உள்ளது.
இந்த இலக்கங்களை அவர்கள் வைத்திரப்பதன் மூலம் இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக திகழ்பவர்களாக இருப்பார்கள்.7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 6 அல்லது 9 என்ற எண்ணை அதிர்ஷ்டமாக கொண்டுள்ளனர்.
இதனால் இவர்கள் நல்லிணக்கம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 4, 5, 7 அல்லது 8 ஐ அதிர்ஷ்டமாக கொண்டுள்ளனர்.
எனவே உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படும். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 1, 2, 3 அல்லது 7 ஆகிய எண்களை அதிர்ஷ்டமாக கொண்டுள்ளனர்.
இந்த அதிர்ஷ்ட எண்களைத் தேர்ந்தெடுப்பது தகவல் தொடர்பு திறன் மற்றும் நுண்ணறிவை மேம்படுத்துகிறது. வாழ்க்கையில் நேர்மறையான முடிவுகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 5, 6 அல்லது 8 ஆகிய எண்களை அதிர்ஷ்டமாக கொண்டுள்ளனர். உங்களிடம் வாழ்க்கையின் ஸ்திரத்தன்மை அதிகமாக காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |