உங்களது பிறந்த திகதி இதுவா? 2022ம் ஆண்டில் உங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தானாம்
ஜோதிட சாஸ்திரத்தில் ராசிகள் மூலம் ஜாதகம் சொல்லப்படுவதைப் போல எண் கணிதத்திலும் (Numerology), ஒருவரின் எதிர்காலத்தை அவர் பிறந்த தேதி மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு நபரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையை வைத்து அவருக்கான பலன்களை கணிக்கலாம்.
உதாரணமாக, ஒருவர் ஏதேனும் ஒரு மாதத்தின் 15 ஆம் தேதி பிறந்திருந்தால், 1 மற்றும் 5 ஐக் கூட்டினால் அந்த நபரின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகை 6 ஆக இருக்கும்.
பிறந்த தேதியை கூட்டி கிடைக்கும் ஒற்றை எண், அதாவது கூட்டுத் தொகை பிறந்த எண் ஆகும். உதாரணத்திற்கு 1,10,19, 28 என்றால் அவர்களின் பிறந்த எண் 1 ஆகும்.
2022ம் ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 6 ஆக இருப்பதால், பிறந்த எண் 6 உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதே நேரத்தில், 6 ஆம் எண் சுக்கிர கிரகத்தின் எண்ணாகக் கருதப்படுகிறது.
மகிழ்ச்சி, அழகு, தொழில், செல்வம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக சுக்கிரம் கருதப்படுகிறது. பிறந்த எண் 6 என உள்ளவர்களை தவிர, பொதுவாகவே இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.
பிறந்த எண் 1:
எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறந்த எண் 1 ஆகும். பிறந்த எண் 1-ன் சொந்தக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். அவருடைய தொழில் பிரகாசிக்கும். வேலை, வியாபாரம் என இரண்டிலும் முன்னேற்றம் இருக்கும். பெரும் பண ஆதாயம் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
பிறந்த எண் 2:
எந்த மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறந்த எண் 2 ஆகும். இவர்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அந்த வாய்ப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வருமானம் பெரிய அளவில் அதிகரிக்கும். இது பொருளாதார நிலைமையை வலுப்படுத்தும். உங்கள் திறமை மற்றும் கடின உழைப்பால், நீங்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வீர்கள்.
பிறந்த எண் 6:
எந்த மாதத்திலும் 6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறந்த எண் 6 இருக்கும். இந்த ஆண்டு பிறந்த 6-ன் சொந்தக்காரர்களுக்கு அதிகபட்ச பலனைத் தரும்.
ஏனெனில் இந்த ஆண்டின் இலக்கங்களின் கூட்டுத்தொகை 6 ஆகும். சுக்கிரன் கிரகம் இந்த ராசிக்காரர்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இதைத் தவிர, பொருள் சுக அனுபவங்கள் நிறைய இருக்கும்.