உங்களை கொடிக்கட்டி பறக்க வைக்கும் தொழில்- எண்கணிதம்படி செய்ங்க
ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கும் கிரக மாற்றங்களை வைத்து அவர்களின் ராசியை தெரிந்து கொள்ளலாம்.
ராசியை வைத்து அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை போன்ற பலவற்றை கணிக்க முடியும்.
அப்படிப்பட்ட ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதம் என்பது எண்களின் அடிப்படையாக வைத்து ஒருவரின் குணாதிசயம், எதிர்காலம், தொழில் வாழ்க்கை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
எண் கணிதத்தின் படி, ஒவ்வொரு எண்ணும் தனித்துவமான ஆற்றல்கள் மற்றும் பண்புகளுடன் தொடர்பு கொண்டவை. இந்த எண்கள் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு அந்நபர் எந்த தொழிலையும் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், எண்கணிதம்படி 1-9 வரையிலான எண்களில் பிறந்தவர்கள் என்னென்ன தொழில் செய்தால் வெற்றிப் பெறுவார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எண் 1 | வாழ்க்கை பாதை எண் 1-க்கு உரியவர்கள் குழு தலைவர், ராணுவ அதிகாரி, அரசியல் தலைவர், புதுமைப்பித்தன், தலைமை நிர்வாக அதிகாரி, கண்டுபிடிப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நிறுவனர் ஆகியவர்களாக தொழில் செய்தால் வெற்றி காண்பார்கள். |
எண் 2 | வாழ்க்கை பாதை எண் 2-க்கு உரியவர்கள் மீடியேட்டர், ஆலோசகர், ராஜதந்திரி, திருமண பொருத்தம் செய்பவர், கவுன்சலர், ஊக்கமளிக்கும் பேச்சாளர், கலைஞர், செல்வாக்கு செலுத்துபவர், ஆடை வடிவமைப்பாளர், ஜோதிடர் ஆகிய துறைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். |
எண் 3 | வாழ்க்கை பாதை எண் 3-க்கு உரியவர்களுக்கு ஆசிரியர், வழக்கறிஞர், பொது பேச்சாளர், மருத்துவ துறை, சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங், எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்தும் கலைஞர் |
எண் 4 | வாழ்க்கை பாதை எண் 4-க்கு உரியவர்கள் ஆசிரியர், பத்திரிகையாளர், பொறியாளர், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில்நுட்பம் தொடர்பான துறையில் இருந்தால், சிறந்து விளங்குவார்கள். |
எண் 5 | வாழ்க்கை பாதை எண் 5-க்கு உரியவர்கள் சேல்ஸ் மேன், எந்த வகையான வணிகம், டிராவல் ப்ளாக்கர், நடிகர், இசைக்கலைஞர் போன்றவற்றில் இருந்தால், செழித்து முன்னேறி வருவார்கள். |
எண் 6 | கட்டிடக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், பியூட்டி இன்ப்ளூயன்சர், மேக்கப் கலைஞர், நகைகள் அல்லது ஆடம்பர பிராண்ட், கலைஞர் போன்றவை சிறந்ததாக இருக்கும். |
எண் 7 | ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், ஆன்மீக ரீதியாக குணப்படுத்துபவர், மறை அறிவியல், மருத்துவ துறை, ஆசிரியர். |
எண் 8 | நிதி மேலாளர், முதலீட்டாளர், ரியல் எஸ்டேட், கட்டுமானம், வங்கியாளர், எச்ஆர், நிர்வாகம் போன்றவற்றில் இருந்தால், கொடிகட்டி பறப்பார்கள். |
எண் 9 | விளையாட்டு, ராணுவம் தொடர்பான வேலை, சுகாதார துறை, தொழில்நுட்பம், உணவு, கட்டுமானம், ஊக்கமளிக்கும் பேச்சாளர் போன்றவற்றில் தங்களின் தொழிலை அமைத்துக் கொண்டால், சிறந்து திகழ்வார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).