Numerology : பெண் குழந்தைகள் இந்த தேதியில் பிறந்தால் அதிர்ஷ்டமாம்- உங்க குழந்தை பிறந்த தேதி என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட திகதிகளில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்களால் வீட்டிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. அப்படியான திகதிகள் என்னென்ன அதன் பலன்கள் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் கொண்டு வரும் பெண்கள் பிறந்த திகதிகள்
1. 3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் ரேடிக்ஸ் எண் 3 ஆக இருக்கும். இந்த குழந்தைகள் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சி, செல்வம் நம்மை தேடி வரும் எனக் கூறப்படுகின்றது. அந்த குழந்தையை பெற்ற பெற்றோர்கள் தங்களை அதிர்ஷ்டசாலியாக பார்ப்பார்கள்.
2. 3 ஆம் திகதி பிறந்த பெண் பிள்ளைகள் இயற்கையில் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களால் தந்தைக்கு வணிகத்தில் பாரிய அதிர்ஷ்டம் கிடைக்கும். லட்சுமி தேவியின் அருள் அவர்களிடம் இருக்கும். அவர்கள் திருமணமாகி செல்லும் வீடும் செழிப்பு பெறும்.
3. 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதங்களிலும் 21 ஆம் திகதி பிறக்கும் பெண் குழந்தைகள் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர் பிறந்த நேரம் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். அவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். கூர்மையான மனம் கொண்டவளாக இருப்பார்கள். கனவுகளுக்காக எந்நேரமும் உழைப்பார்கள்.
4. 30 ஆம் திகதி பிறந்த குழந்தைகள் இனிமையான பேச்சு, அழகு மற்றும் மென்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை விட கடின உழைப்பாளிகள் மற்றும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எப்படியான சவால்கள் வந்தால் எதிர்த்து நிற்கும் குணம் அவர்களிடம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். எல்லாவற்றிலும் வெற்றியடையும் ஆர்வம் உங்களிடம் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |