நவம்பர் மாதத்தில் அதிஷ்டத்தை கொண்டாடும் 4 ராசிக்காரர்கள்: இதில் உங்க ராசி என்ன?
2023ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும்.
இந்த மாற்றத்தில் சில ராசிக்காரர்கள் அதிஷ்டமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த அதிஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
நவம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழக்கையில் சில மாற்றங்கள் நிகழவுள்ளது. இந்த மாதத்தில் நீங்கள் பரிணாம வளர்ச்சி அடைய தூண்டுதலாக இருக்கும். இந்தக் காலத்தில் உங்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும். பொறுப்பற்ற செலவுகள் வரும். சிந்தித்து செயற்பட்டு முன்னேற இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆனவர்களுக்கு மனைவியுடன் நல்லிணக்கம் ஏற்படும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவீர்கள். காதல் விவகாரம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்பும் ஆதரவும் கிடைக்கும், நிதிப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். முதலீட்டுவிடயங்களில் நற்பலன்கள் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு தடையில்லாமல் தொடங்கலாம். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாய்ப்புகளுக்கான மாதமாக இருக்கும். இந்த மாத இறுதியில், நிலம் அல்லது சொத்து தகராறுகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய வாகனம் வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இந்த நேரம் அதற்கு ஏற்ற நேரமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |