மேஷ ராசிக்காரர்களிடம் இந்த விடயத்தினை சொல்லவே கூடாதாம்! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் தைரியத்துடனும், சுந்திரமாகவும் இருக்கும் இவர்களிடம் சில விடயங்களை சொல்லக்கூடாதாம். அவ்வாறு கூறும் பட்சத்தில் கோபத்தில் உச்சத்திற்கு செல்கின்றனர்.
பிடிவாதம் குறுகிய மனநிலை கொண்ட இவர்கள் எந்த நேரத்தில் தனது குணத்தினை மாற்றுவார்கள் என்பது தெரியாதாம்.
இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அருகில் இருப்பவர் பொறுமையாக கேட்க வேண்டுமாம். ஏதாவது கேள்விகளை கேட்டால் உடனடியாக கடும் அப்செட்டிற்கு சென்று விடுவார்களாம்.
எந்த விடயத்தையும் வெளிப்படையாக பேசாத இவர்கள் தங்களது மனக்குமுறல்களை சொல்வதற்கே தயக்கம் காட்டுவார்கள். அருகில் இருப்பவர் எதுவும் கூறாமல் இருந்தால் மட்டுமே இவர்கள் வெளிப்படையாக பேசுவார்கள்.
தனது நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து மோசமான விமர்சனம் எழுந்தால் அதனை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் மிகவும் கஷ்டப்படுவார்களாம்.
மேஷ ராசிக்காரர்களை நீங்கள் எந்த வகையில் காக்க வைக்கக்கூடாதாம். ஏனெனில் அவர்களுக்கு காத்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காதாம். ஒரு நிமிட தாமதத்திற்கு கோபத்தின் உச்சத்திற்கு போயிடுவார்கள்.
அதிலும் அவர்கள் அந்த கோபத்தை உங்களிடம் நேரடியாகக் காட்டாமல் மனதுக்குள்ளே வைத்து கொள்வார்கள். அது என்றைக்காவது ஏதாவது ஒருவகையில் உங்களிடமே திரும்பி வரும்.
மேஷ ராசிக்காரர்கள் சுயநலவாதிகள் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் இருந்தாலும் அவர்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருமுறை நீங்கள் அவர்களை இப்படி எங்காவது சுட்டிக்காட்டினால் உங்களுடைய நட்பையே அவர்கள் தூக்கி எறியவும் தயங்கவே மாட்டார்களாம்.