சுட்டு போட்டாலும் ரொமன்ஸ் வராத ஐந்து ராசிக்காரர்கள்!
தற்போது இருக்கும் இளைஞர்கள் காதல் விடயத்தில் கெட்டித்தனமாக இருந்து வருகிறார்கள். ஆனால் இதிலும் சிலருக்கு இந்த காதல் என்றாலே செட்டாகாது என நினைத்து கொண்டு அது பற்றிய நினைப்பு கூட இல்லாமல் இருந்து வருகிறார்கள்.
அப்புடியும் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு ரொமன்ஸ் என்ற ஒன்று வராது. இவ்வாறான சிக்கலான நிலைமையில் தான் தற்காலத்தில் இருக்கும் சில இளைஞர்கள் இருந்து வருகிறார்கள்.
திருமண பந்தத்தில் இருக்கும் அழகை எடுத்து காட்டுவதற்கு இந்த ரொமன்ஸ் இருந்து வருகிறது. இந்த விடயத்தில் வீக்காக இருக்கும் தம்பதிகள் நீண்டக்காலம் சேர்ந்து வாழமாட்டார்கள்.
இது கூட ராசிப்பலன்கள் வைத்து கணிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் என்ன பண்ணாலும் ரொமன்ஸ் வராத ராசிக்காரர்கள் தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
திருமண வாழ்க்கையை விரும்பாத ராசிக்காரர்கள்
1. ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் என்ன தான் காதல் விவகாரங்கள் ஆக்டிவாக இருந்தாலும் ரொமன்ஸ் என்று வரும் போது சற்று தயங்குவார்கள். அதிலும் இந்த ராசிக்காரர்களுக்கு திருமண சுகத்தை தரக்கூடிய சுக்கிரன் ஆதிக்கமுள்ளவர்கள், இவர்கள் எதற்கு எடுத்தாலும் கோவப்படுவதால் இவர்களுக்கான காதல் மற்றும் திருமண வாழ்க்கை நிலைக்காமல் செல்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
2. கன்னி ராசி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு அதிபதியாக புதன் இருப்பார். இவர்கள் நுணுக்கமான அறிவு கொண்டவர்களாக காணப்படுவார்கள். இவர்களின் காதல் வாழ்க்கை எடுத்து பார்த்தால் அது நான்கு சுவருக்குள் மாத்திரம் இருக்கும். இவர்களுக்கு வெட்கம் அதிகமாக இருப்பதால் காதலை காட்டுவதற்கு கூச்சப்படுவார்கள். இவர்களை பொருத்தமட்டில் காதல் என்பது குறிப்பிட்ட இருவருக்கு மாத்திரம் இருக்கிறது எனக் கூறுவார்கள்.
3. விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கார்கள் தாம்பதிய வாழ்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தன்னுடைய துனை நெருக்கமாகவே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னுடைய துணையிடம் எந்த நேரத்திலும் காதலை காட்டி கொண்டே இருப்பார். இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
4. மகர ராசி
மகர ராசிக்காரர்கள் உழைப்பில் அதிக நாட்டம் காட்டுவார்கள். இவர்கள் மரபு வழி மார்க்கத்தை விரும்புவார்கள். இவர்கள் திருமண வாழ்க்கையில் ரொமன்ஸ் காட்டுவது குறைவாக காணப்படும். ஆனால் மனைவியுடன் உறவில் இருக்கும் போது அதனை காட்டுவார்கள்.
5. கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் உழைப்பில் நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் அதிகமாக இரகசிய உறவு மீது நாட்டம் காட்டுவார்கள். இவர்கள் தகாத உறவில் இருப்பதால் திருமண வாழ்க்கை மீது நாட்டம் குறைவாக இருக்கும். மேலும் மற்றவர்கள் முன் இதனை வெளிப்படையாக காட்டுவார்கள்.
முக்கிய குறிப்பு
மேற்குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தும் ராசிகளை வைத்து கணித்த கணிப்பு மாத்திரமே இது தொடர்பாக மேலதிக தகவல்களை உங்களுக்கு ஜோதிடரை நாடலாம்