இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
இரவில் நகங்கள் வெட்டக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.
நகம் வெட்டுதல்
இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மீக காரணமும் உண்டு, அறிவியல் காரணமும் உண்டு. ஆன்மீகப்படி கூறப்போனால் மாலை நேரங்களில் லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்வதால் நகம் வெட்டக்கூடாது என கூறுவார்கள்.
இதை தவிர பில்லி, சூனியம் போன்ற செய்வினைகளுக்கு பெரும்பாலும் உடைந்த நகத் துண்டுகளையே பயன்படுத்துவார்களாம்.
எனவே, நகங்கள் தரையில் விழும்போது, நமக்கு எதிராக சூனியம் செய்யும் நபர்களோ அல்லது வேறு ஏதாவது தீய சக்தியோ, நம்முடைய நகங்களை சேகரித்து நமக்கு தீங்கினை உண்டாக்கலாம் என்பதால், இந்த செயல்களை செய்வதை இரவில் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
துஷ்ட சக்திகள் இரவில் நடமாடும் போது நாம் நகத்தை வெட்டி கீழே போட்டால் அந்த சக்திகளால் நாம் ஈர்க்கப்படுவோம் என ஆன்மீகப்படி நம்பப்படுகிறது. அறிவியல் படி பார்த்தால் சுகாதாரத்தை பேணுதல் மிகவும் முக்கியம்.
முன்னைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லை கத்தியால் தான் நகத்தை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் போது காயங்கள் ஏற்படும் என்பதற்காக நகத்தை வெட்ட வேண்டாம் என பழக்கப்படுத்தி வந்தனர்.
இதை தவிர வெளிச்சம் இலல்லாத நேரத்தில் நகம் வெட்டும் போது அது உணவில் விழ வாய்ப்பு உள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் பாரிய உபாதைகளை கொண்டு வரும். என அறிவியல் மூலமாக கூறப்படுகின்றது.
இது போக நகம் வெட்டுவதற்கென் சில நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் நகம் வெட்டினால், உங்களுடைய மன உறுதியை குறைக்க வாய்ப்பு உள்ளதாம்.
எனவே, சனிக்கிழமை நகம் வெட்டுவதை தவிர்க்கலாம். புதன்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய பூர்வீக சொத்தை பெருக்க உதவும். வியாழனன்று நகம் வெட்டினால் கெட்ட விஷயங்கள் நடக்காமல் தடுக்கப்படும்.
வெள்ளிக்கிழமை நகம் வெட்டினால் உங்களுடைய விருப்பத்திற்குரியவர்களை சந்திக்கக்கூடும்.
திங்கள்கிழமை நகம் வெட்டுவது உங்களுடைய உடல்நலத்தை மேம்படுத்தும். செவ்வாய் என்று நகம் வெட்டினால் கடன் சுமை குறையும். இதுபோன்ற விஷயங்கள் ஆன்மீக ரீதியாக சொல்பவை. எதுவாக இருந்தாலும் இரவில் நகம் வெட்ட கூடாது என்பதே வலியுறுத்தப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |