நோஸ்ட்ராடாமஸின் பகீர் கிளப்பும் கணிப்புகள்! 2026 இல் இது நடந்தே தீரும்
2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் இருக்கிறோம். புத்தாண்டு நெருங்கி வருவதால் வரப்போகிற ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜோதிடர்களும், 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளை கணிக்க இப்போதே தொடங்கிவிட்டார்கள். தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் முக்கியமானவர்கள் என்றால் நிச்சயம் பாபா வாங்காவும், நோஸ்ட்ரடாமஸும்தான்.

நோஸ்ட்ராடாமஸின் பகீர் கணிப்புகள்
நோஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்ட்ராடாம், சில முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது.
உலகையே நடுங்க வைத்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதற்கு முன்பு, இளவரசி டயானாவின் மரணம்போன்றவை அவரது முக்கியமான கணிப்புகளாகும்.

1555 இல் வெளியிடப்பட்ட லெஸ் ப்ராஃபெட்டீஸ் என்ற புத்தகத்தில் அவர் தனது கணிப்புகளை வெளியிட்டார். லத்தீன் சொற்றொடர்கள் மற்றும் பழைய பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி, அவர் தனது 942 கணிப்புகளைச் செய்தார்.
அந்த கணிப்புகளை புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் உலக நிகழ்வுகளை அவர் முன்னறிவித்தார் என்பதை பெரிதும் நம்புகின்றார்கள்.
அந்தவகையில் 2026ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் பகீர் கணிப்புகள் குறித்து விரிவாக இந்த காணொளியின் வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |